Tuesday, March 19, 2013

வாயுக்களின் நடத்தையைப் பாதிக்கும் காரணிகளும் வாயுக்களின் நடத்தைக் கோலங்களும்

சடப்பொருட்கள் (Matters)
திணிவைக்கொண்டதும், இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடியதுமான பொருட்கள் சடப் பொருட்கள் எனப்படும்.
சடப்பொருட்கள் சூழலில் பின்வரும் மூவகை நிலைகளில் காணப்படுகின்றன.
1. திண்மம் (Solid)
2. திரவம் (Liquid)
3. வாயு (Gas)
இச்சடப்பொருட்களின் மூவகை நிலைகளும் சக்தியை ஏற்றோ, இழந்தோ ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றமடையக்கூடியன.
Eg  :- நீர் வட்டம்

சடப்பொருட்களின் துணிக்கை மாதிரியுரு
சடப்பொருட்களின் பௌதீக நிலைகளில் துணிக்கைகள் அமைந்துள்ள விதத்தைக் காட்டுகின்ற ஒரு கற்பனை மாதிரியுரு சடப்பொருட்களின் துணிக்கை மாதிரியுரு எனப்படும்.
Note  :-
திரவ, வாயுத்துணிக்கைகள் ஒன்றன் மீது ஒன்று வழுக்கி அசைவதனால் அவை பாய்பொருட்கள் எனப்படுகின்றன.

வாயுக்களின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
1. அமுக்கம்
2. கனவளவு
3. வெப்பநிலை
4. பதார்த்தத்தின் அளவு

No comments:

Post a Comment